வட கொரியா நாட்டை விட்டு வெளியேறி தென் கொரியாவிற்கு வருகை தரும் நபர்களுக்கு தலா ரூ13 கோடி பரிசு வழங்கப்படும் என தென் கொரியா அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐ.நா சபையின் எதிர்ப்பை மீறி அணுகுண்டு சோதனைகளை செய்து வரும் வட கொரியாவை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடுமையாக கண்டித்து வருகின்றன.
வட கொரியா அதிபரான கிம் யோங்-அன்னின் சர்வாதிகார ஆட்சியால் அச்சுறுத்தலுக்கு உள்ளான பல முக்கிய அதிகாரிகள் அந்நாட்டை விட்டு வெளியேறி பிற நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றன.
இந்நிலையில், வட கொரியா நாட்டின் முக்கிய எதிரி நாடான தென் கொரியா ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், ‘வட கொரியா நாட்டை பற்றி ரகசிய தகவல்களுடன் தென் கொரியா நாட்டிற்கு வருகை தரும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 7,00,000 பவுண்ட்(13,01,94,487 இலங்கை ரூபாய்) பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுமட்டுமில்லாமல், பிராங்கி, போர் விமானங்கள், பிற ராணுவ ஆயுதங்களுடன் அந்நாட்டில் இருந்து தப்பி தென் கொரியாவிற்கு வரும் ராணுவ வீரர்களுக்கு கூடுதலான தொகை அளிக்கப்படும் என தென் கொரியா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் வட கொரியா பற்றிய சதி திட்டங்களை தெரிந்துக்கொள்வதுடன், தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த முடியும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.