பொதுவாகவே இருமல் பல்வேறு நுறையீரல் சம்பந்தமான பிரச்சினைகளின் முக்கிய அறிகுறியாக இருக்கின்றது.
சளி போன்ற இருமல் காணப்படுவது இயல்பான விடயம் தான். ஆனால் குறுகிய நாட்களில் இருமல் சரியாகாமல் பல வாரங்கள் வரை நீடித்தால் வீக்கம், எரிச்சல் மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்தும்.
இருமல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில மிகவும் தீவிரமான நுறையீரல் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கும். ஒரு நபர் இருமும் போது, நுரையீரல் மிகவும் தீவிரமாகவும் வேகமாகவும் காற்றை வெளிவிடும்.
இதன் வேகம் மணிக்கு 100 மைல்கள் வரை இருக்கம். அதனாலேயே சுவாச பாதையில் ஏற்பட்டிருந்த தடைகளை அகற்ற முடிகின்றது.
தொண்டை வலி, பல்வேறு நிற சளி, மார்பு வலி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் இது சாதாரண இருமல் காரணமாக தான் ஏற்பட்டிருக்கின்றது என கூறிவிட முடியாது.
இதனை அலட்சியப்படுத்தாது முறையாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி போன்ற தீவிரமான நோய்களின் பிரதான அறிகுறியாக இருமும் போது ரத்தம் வருவதை குறிப்பிடலாம்.
சுவாசக் குழாயில் உள்ள செல்களே சளிஉருவாக காரணமாக இருக்கின்றது. சளியின் நிறம் மஞ்சள், பச்சை அல்லது பழுப்பு நிறமாக இருந்தால், அவற்றில் வெண்குருதி கலன்கள் இருப்பதாக அர்த்தம். இந்த செல்களே உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகின்றது.
ஒரு வாரத்திற்கு மேல் இந்த வகையான சளி இருந்தால், அது நிமோனியாவின் பிரதான அறிகுறியாகும். மேலும் இளஞ்சிவப்பு அல்லது நுரையுடனான சளி இதய செயலிழப்பு அல்லது நுரையீரல் வீக்கம் ஆகிய நோயின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்புள்ளது.
அத்துடன் இருமல் கரகரப்பு அல்லது மூச்சுத் திணறல் காணப்பட்டால், அது அமில ரிஃப்ளக்ஸ், ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை எதிர்வினையாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.