இன்றைய இளம் சமூகத்தினருக்கு அதிக உடல் எடை என்பது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதற்கு காரணம் உடல் இயக்கம் இல்லாமல் உட்காந்து அல்லது சோம்பேறித்தனமாக இருப்பது தான்.
ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.
தினசரி உணவுப்பழக்கத்தை மாற்றி சீரான உணவுப்பழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் உடல் எடையை குறப்பது சுலபம். இந்த பழக்கவழக்கத்தை சீராக கடைபிடிக்காமல் ஒரு சில நாட்கள் கடைபித்துவிட்டு உடனடி பலன் கிக்கவில்லை என்று மனவருத்ததுடன் மாற்று வழிகளை கையாளுகின்றனர்.
அந்த மாற்று வழியாக அமைவது மாத்திரை எடுத்து கொள்வது.இவ்வாறு மாத்திரை எடுத்து கொள்வதால் எவ்வாறான பிச்சனை ஏற்படுகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நடைமுறை வாழ்கையில் மாற்றங்கள் ஏற்படாத போது மாத்திரைகள் மூலமாக பலன் கிடைத்தால் மக்கள் அதையே விரும்பி செய்கின்றனர்.
ஆரம்பத்தில் இது வெற்றியாக தோன்றினாலும், நீண்டகால உடல்நலன் அடிப்படையில் இதை மிகுந்த கவனத்தோடு செயல்படுத்த வேண்டும்.
உடல் எடை குறைப்பிற்கு சந்தையில் விற்கப்படுகின்ற மாத்திரைகள் எல்லாம் மோசமான பக்க விளைவுகளை உண்டாக்கும். இதனால் செரிமானக் கோளாறு, இதய படபடப்பு முதல் எண்ணற்ற பல விளைவுகளை இவை ஏற்படுத்தும்.
இது அனேகமாக மக்களுக்கு தெரிவது இல்லை. இந்த மாத்திரைகள் எடுத்து கொள்வதால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிக்கும். அதன் விளைவாக இதயநலக் கோளாறுகள் ஏற்படும்.
குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுவலி போன்ற குடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் சோர்வாக ஆரம்மிக்கும்…. மனக்கவலைகள் தூக்கமின்மை ஏற்படுகின்றன.
இதுமட்டுமல்லாமல் நமது கல்லீரலில் நிறைய பாதிப்புகள் வரும்.மாத்திரைகள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம். இன்று உடல் எடை குறைப்பு மாத்திரையானது மாபெரும் அளவில் கட்டுப்பாடின்றி உற்பத்தியாகி வருகின்றது.
இவ்வாறு வரும் அனைத்து மாத்திரைகளும் முறையாக பரிசோதனை செய்யப்பட்டு, போதுமான ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு வருவதில்லை.
சில மாத்திரைகளுக்கு மூலப்பொருள் என்ன என்பதே தெரியாமல் இருக்கும்.
அந்த வகையில் இந்த பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கு தினசரி உடற்பயிற்சி, முறையான தூக்கம், மன அழுத்தத்திற்கு தீர்வு போன்ற பல்வேறு வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டாலே போதும் உடல் எடையை குறைத்து கொள்ளலாம்.
மாத்திரைகள் குறுகிய காலத்தில் பலன் தந்தாலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனவே மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.