ஆரம்ப கால கட்டத்தில் மக்கள் எல்லோரும் உடலை வருத்தி உணவுகளை தயாரித்து செய்து உண்டார்கள். அந்த காலத்தில் தொழிநுட்பவியலின் அவ்வளவாக இல்லை அதனால் மக்கள் தங்களின் வேலைகளை தாமே செய்தனர்.
ஆனால் தற்காலத்தில் மனிதன் தனது ஆறாம் அறிவைப் பயன்படுத்தி பல தொழினுட்பங்களை கண்டுபிடித்துள்ளான். இவ்வாறான சூழ்நிலையில் மனிதன் உடலளவில் வேலை செய்வது குறைவு.
மேலும் உணவுப்பழக்கவழக்கங்களும் வேறாக காணப்படுகின்றது. சந்தையில் விற்பனையாகும் துரித உணவுகளை மக்கள் அதிகம் உண்கின்றனர். நவீன கால கட்டத்தின் அடிப்படையில் பணத்தின் தேவை அதிகமாக இருப்பதால் அவசரமான உலகமாக மாறிவிட்டது.
அதனால் வேலைக்கு செல்கின்றனர். உடற்பயிற்சிகள் செய்வதற்கான நேரம் அமைவதில்லை. இவற்றின் காரணமாகத் தான் உடல் எடையும் அதிகரிக்கின்றது. இப்படி அதிகரிக்கும் உடல் எடையை குறைக்க சில வழிகளை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
நெல்லிக்காயில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. தினமும் காலையில் வெறு வயிற்றில் நெல்லிக்காயுடன் இஞ்சி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து தண்ணீரில் கலந்து வடிகட்டி குடித்துவர கபம், வாதம், பித்தம் ஆகியவை சமநிலையாக செயற்படும்.
இப்படி குடிப்பதால் மாதத்தில் 3 இருந்து 5 கிலோ வரை உடல் எடை குறைக்க முடியும். மற்றும் தலைமுடி கொட்டுதல் மற்றும் நரைத்தல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதற்கு இந்த குடிநீர் உதவுகிறது.
கண்கள் மற்றும் ரத்த போக்கு பிரச்சனை இருப்பவர்களும் இதை குடிக்கலாம். நீரழிவு நோயாளிகள் இதை குடித்து வந்தால் சக்கரையின் அளவு கட்டுக்குள் வைத்திருக்கிறது.
செரிமானப் பிரச்சனைக்கும் இது சிறந்த தீர்வாக காணப்படுகின்றது.