சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி (சைட்டம்) தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.
இதற்குரிய சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ கொண்டுவரவுள்ளார்.
ஆரம்பகட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் காலை முதல் இரவு வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.
இதற்கிடையில், எதிர்வரும் 7ஆம் திகதி ஏற்றுமதி, இறக்குமதி சட்டமூலம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட்டு மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை மறுநாள் 8 ஆம் திகதி நிலைபேறு அபிவிருத்தி சட்ட மூலம் தொடர்பில் விவாதம் இடம்பெறும். மேற்படி சட்ட மூலத்துக்கு 7 மாகாண சபைகள் அங்கீகாரம் அளித்துள்ளன.
எனினும், வடக்கு மாகாண சபை நிராகரித்துள்ளது. கிழக்கு மாகாண சபை அவகாசம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை, வறட்சியால் ஏற்பட்ட உணவு, குடிதண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும் எனவும் தெரியவருகிறது,