Loading...
நாட்டில் அமெரிக்க டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தெரிவிக்கையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் நாட்டின் டொலர் கையிருப்பு 4.4 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
உள்நாட்டு வெளிநாட்டு நிதிச் சந்தை கொள்வனவு மற்றும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற நிதி வசதிகள் என்பனவற்றின் காரணமாக இவ்வாறு டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளது.
Loading...
இந்த 4.4 பில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பில் 1.4 பில்லியன் டொலர் சீனாவினால் வழங்கப்பட்ட தொகை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத காரணத்தினால் இந்த 1.4 பில்லியன் டொலர்களை பயன்படுத்த முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Loading...