யாழ்ப்பாணத்தில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.
இச் சம்பவமானது மயிலிட்டி கடல் பகுதியில் நேற்று முன்தினம் (27) இடம்பெற்றுள்ளது.
குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு வயது பிள்ளையையும் , தனது சகோதரியின் 7 வயது மகளையும் படகில் ஏற்றி கடலில் ஆபத்தான முறையில் படகை செலுத்தியுள்ளார்.
அதன் போது , படகினுள் கடற்தண்ணீர் உட்புகுந்ததுடன் , படகில் இருந்த பிள்ளைகளும் பயத்தில் கத்தியுள்ளனர்.
அதனை கடலில் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கண்ணுற்று , அவ்விடத்திற்கு விரைந்து , படகில் இருந்து பிள்ளைகளை மீட்டதுடன் , படகினை கரைக்கு செலுத்துமாறு குடும்பஸ்தருக்கு உத்தரவிட்டனர்.
கரை சேர்ந்த குடும்பஸ்தரை கடுமையாக எச்சரித்த கடற்படையினர் , இரு பிள்ளைகளையும் கரையில் பாதுகாப்பாக சேர்ந்தனர்.
இதேவேளை படகோட்டிய குடும்பஸ்தர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.