யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்றையதினம்( 29)வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 9 மாதங்கள் சிறை தண்டனை என்ற அடிப்படையில் அவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
கடற்றொழிலாளர்களிடம் கைப்பற்றப்பட்ட படகினை அரச உடமையாக்குமாறும் கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசி உள்ளிட்ட வேறு உடமைகளை மீள வழங்குமாறு நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் உத்தரவிட்டார்.
விடுதலை செய்யப்பட்ட 10 கடற்றொழிலாளர்களையும் மிரிஹான முகாமிற்கு அனுப்பி, இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை படகின் உரிமையாளரான முதலாவது சந்தேகநபருக்கு நீதித் துறையின் ஊடாக அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவிடப்பட்டது. குறித்த நபருக்கான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி தவணையிடப்பட்டுள்ளது.