ஐ.நா மனித உரிமை பேரவையினால் பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தங்களுக்கு முகம் கொடுப்பதற்காக இலங்கை மாற்று யோசனைக்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரனி பேராசிரியர் பிரதிபா மஹனாமஹேவா இந்த யோசனையை தெரிவித்துள்ளார்.
நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காக இலங்கை மேற்கொள்ளும் செயற்பாடு மந்தகதியில் உள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நிலையான சமாதானத்தை பேணுவதில் இலங்கைக்கு தாமதமேற்படக் கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு இதற்கு முன்னர் சமர்ப்பித்த யோசனை தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமையின் காரணமாக இவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் மஹானாமஹெவா தெரிவித்துள்ளார்.
குறித்த சவால்களை வெற்றிக் கொள்வதற்காக சர்வதேசம் மேலும் கால அவகாசம் கோருவதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான நடவடிக்கைகள் வலுவிழந்துள்ளமையினால் சர்வதேசத்தின் முன் சிக்கலான நிலைமைக்கு முகம் கொடுக்கும் நிலை இலங்கைக்கு ஏற்படும் என அங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.