கொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றில் கெட்டுப்போன சூப்பை வாடிக்கையாளருக்கு வழங்கியதால் சர்ச்சை வெடித்துள்ளது.
கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் சாப்பிட சென்ற தம்பதிக்கு கெட்டுப்போன சூப்பை பரிமாறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2ம் திகதி இரவு ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற தம்பதி, தங்களுக்குப் கெட்டுப்போன சூப் வழங்கப்பட்டதாக கோட்டை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறையீடு செய்துள்ளனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், உணவு மாதிரிகள் பொரளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் உணவகத்தில் பரிமாறப்பட்ட சூப்பை குடித்த நபர் உடல் உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு எதிரான வழக்கை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு கோட்டை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.