Loading...
வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வற் வரி பதிவுச்சான்றிதழை வணிக ஸ்தாபனத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்துவதை உள்நாட்டு இறைவரித்திணைக்களம் கட்டாயமாக்கியுள்ளது.
குறித்த நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் சான்றிதழின் புகைப்பட நகல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
Loading...
மேலும், டெண்டர் ஒப்பந்தங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், சேவை வழங்குநர் மற்றும் பொருட்களை வழங்குபவர்கள் தங்கள் பதிவு எண்ணை விநியோக அட்டையில் தெளிவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...