வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெறாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை இடைநிறுத்தியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம்.
உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக பெப்ரவரி முதலாம் திகதி முதல் அதனை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வற் பதிவுச் சான்றிதழை, வணிக ஸ்தாபனத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்படுவது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.