Loading...
இலங்கையில் இன்று முதல் நடைமுறையாகும் வகையில், கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, இணையவழி மற்றும் இணையவழி அல்லாத சாதாரண சேவைக்கான கட்டணம் 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கான கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
Loading...
5,000 ரூபாவாக இருந்த சாதாரண சேவை கடவுச்சீட்டு கட்டணம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புகையிரதத்தில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் மற்றும் பொதிகளுக்கான விலை கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Loading...