கூடப்பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிட்டும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களும் உறுதுணை புரிவர். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
நிதி நிலை உயரும் நாள். பொதுவாழ்வில் ஈடுபட்டு புகழ் சேர்ப்பீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். குழந்தைகளால் உதிரி வருமானம் உண்டு.
எதிரிகள் உதிரியாகும் நாள். இலாகா மாற்றங்கள் உத்தியோகத்தில் வந்து சேரும். பக்கத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள்.
இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிட்டும்.
அஞ்சல் வழியில் அனுகூலம் கிடைக்கும் நாள். அரசு வழிச் சலுகை கிட்டும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வி.ஐ.பி.க்களின் சந்திப்புக் கிட்டும்.
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழியென்ன என்று யோசிப்பீர்கள். செல்வாக்கு மேலோங்கும். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சி கைகூடும்.
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும் நாள். பெண் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். உறவினர் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வருமானம் திருப்தி தரும்.
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அக்கம், பக்கத்து வீட்டாரிடம் ஏற்பட்ட பகை மாறும். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.
யோகமான நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டுவரும் வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துக்களில் முறையான லாபம் கிட்டும்.
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வரவு திருப்தி தரும். தொலைபேசி வழியில் வரும் தகவல் மகிழ்ச்சி தரும். தொழில், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.