Loading...
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற அரகலிய போராட்டத்தின் போது தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொட்டதெனிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் குறிப்பிட்டார்.
Loading...
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிபவர் என அவர் மேலும் தெரிவித்தார்.
Loading...