காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு தேடி ஓடும் அதேவேளை குடிநீருக்குகூட மக்கள் போராடிவருகிறார்கள்.
தெற்கு காஸாவில் உள்ள பாலஸ்தீனக் சிறுவர்களுக்கு உலக சுகாதார மையம் அறிவுறுத்தும் தினசரி எடுத்துக்கொள்ளவேண்டிய தண்ணீர் அளவில் வெறும் 2% சதவீதம் மட்டுமே கிடைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் பாலஸ்தீன மக்களுக்கு நாளொன்றுக்கு வெறும் 1.5 முதல் 2 லிட்டர் அளவு மட்டுமே தண்ணீர் கிடைத்துள்ளது.
உலக சுகாதார மையம் பாலஸ்தீன மக்களுக்கு ஒரு நாளுக்கு 100 லிட்டர் தண்ணீர் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
காஸாவிற்குள் போதுமான அளவு உணவு, தண்ணீர், எரிபொருள்கள் செல்வதை இஸ்ரேல் கடந்த ஒக்டோபர் 9-லிருந்து தடுத்துவருகிறது.
அவ்வப்போது ஒருசில மனிதநேய உதவிகள் காஸா மக்களுக்கு அனுப்பப்பட்டாலும் போதுமான அளவுக்கான அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது