கிளிநொச்சியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் காவல்துறை உத்தியோத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவத்தில் கிளிநொச்சி தர்மபுரம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கோரமோட்டை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதிக்கு விரைந்த தருமபுரம் காவல்துறையினர் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட வேளை சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார்.
இதன்போது அவரை கைது செய்யும் நோக்கில் துரத்திச் சென்ற வேளை மிருக வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் 37 வயதுடைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.