கட்டுநாயக்க, மத்தள மற்றும் இரத்மலானை விமான நிலையங்களை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சுற்றுலா, காணி மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விமான நிலையங்களின் செயற்பாடுகளை நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் சுற்றுலா பயணிகளின் வருகை 106 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
இது 2030 ஆம் ஆண்டளவில் வருடாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 04 மில்லியனாக அதிகரிக்கும்.
சுற்றுலா வலயங்களின் எண்ணிக்கையை 49 இல் இருந்து 64 ஆக அதிகரிக்கவும் அத்துடன் இரண்டு உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்கவும் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.