தம்புளை ஆரம்ப வைத்தியசாலையில் பலவந்தமாக குடும்ப கட்டுபாடு செய்வதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மகப்பேற்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பெண்கள், குழந்தை பிறந்தவுடன் அங்கிருந்து வெளியேறும் போது குடும்ப கட்டுப்பாடு செய்துக் கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக தாய்மார்களுக்கு பலவந்தமான பிறப்பு கட்டுப்பாடு உபகரணம் ஒன்றை உடம்பில் பொருத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு விரும்பாத தாய்மார்களை வீட்டிற்கு அனுப்பாமல் பல நாட்களுக்கு வைத்தியாசலையில் பிறந்த குழந்தையுடன் பலவந்தமாக தடுத்து வைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உபகரணத்தை பொருத்துவதற்கு விரும்பவில்லை என்றால் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் உட்பட வழங்கப்படுவதில்லை என தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தம்புளை வைத்தியசாலையில் இடம்பெறும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு சிலர் கடிதம் மூலம் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளது. உடனடியாக விசாரணை மேற்கொள்வதாக தம்புளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சால்ஸ் நுகவெல தெரிவித்துள்ளார்.