பல வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கான விமானசேவையை ஆரம்பித்த Cathay Pacific விமான சேவை நிறுவனம் கடந்த முதலாம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதன் தலைமை அலுவலகம் ஹொங்கொங்கில் அமைந்துள்ளது. உலகில் சுமார் 80 இடங்களுக்குச் சேவையாற்றும் ஒரு விமான சேவை நிறுவனமாகும்.
253 பயணிகளுடன் வந்திறங்கிய விமானத்திற்கு, விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஏர்லைன்ஸ் ஏர்பஸ் 330-300 விமானத்தைப் பயன்படுத்தி பயணிகள் விமானச் செயற்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
அவர்களின் புதிய விமான அட்டவணையின்படி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி உட்பட வாரத்தில் 3 நாட்கள் விமான சேவைகள் மேற்கொள்ளப்படும்.
மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டமையானது இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு பங்களிக்கும் முக்கிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது.