பொதுவாகவே அனைவருக்கும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பணப்பிரச்சினை வாழ்க்கை முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கிறது.
பணப்பிரச்சினை நீங்கி விடாதா?கடன் தொல்லைகள் அனைத்தையம் சரிசெய்துவிட முடியாதா போன்ற எண்ணங்களில் தான் நம்மில் பலரும் வாழ்கின்றோம்.இதற்கு இந்து சாஸ்திரத்தில் எளிய முறையில் பரிகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து மதத்தில் ஒரு ரூபாய் நாணயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. 1ரூபாய் நாணயம் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் முக்கிய இடம் வகிக்கின்றது.
சுப நிகழ்சிகளுக்கான அழைப்பிதழிலும் 1 ரூபாய் நாணயத்தை வைப்பது வழக்கம். இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்த நாணயத்தால் வறுமையை ஒழிக்க முடியும் என்பது ஐதீகம்.
நீங்கள் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டாலோ அல்லது உங்கள் வேலையை இழந்துவிட்டாலோ பணம் சம்பாதிக்க எந்த வழியும் கைகொடுக்கவில்லை என்றாலோ இந்த 1 ரூபாய் நாணயம் உங்களுக்கு துணைப்புரியும்.
தூங்கும் போது இந்த நாணயத்தை தலையணைக்கு அடியில் வைக்க ஆரம்பியுங்கள். தூங்கும் போது நேர்மறை ஆற்றலை ஈர்பதற்கு ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு பரிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வகையில் இரவில் தூங்கும் போது தலையணைக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும் என்று ஜோதிடம் கூறுகிறது.
ஒரு ரூபாய் நாணயத்தை தலையணைக்கு அடியில் வைத்து தூங்குவதால் நிதி நிலைமை சீராக இருக்கும்.
இரவில் தூங்கும் போது சுத்தமான படுக்கையில் தலையணைக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துவிட்டு மறுநாள் அதை ஏழைகளுக்கு தானம் செய்வது உங்களின் வருமானத்தை படிப்படியாக உயர்த்தும்.
இதை தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் பொருளாதார பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.சேமிக்கும் அளவுக்கு பணம் உங்களிடம் புலங்க ஆரம்பித்துவிடும்.