சமூக வளைத்தளங்களில் ஒரு வகை விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்ட ஆரஞ்சு பழத் தோல் தியரி எனபடும் துணையின் அன்பை பரிசோதிக்கும் இந்த முறை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உங்கள் துணை உங்களை எந்தளவு நேசிக்கின்றார் என்பதை விளங்கிக்கொள்ளும் ஒரு விளையாட்டே இந்த ஆரஞ்சு பழத் தோல் தியரி.
இதன் பெயரிலேயே அர்த்தமும் குறிப்பிடப்படுகின்றது. இந்த புது வகையான தியரியின் அடிப்படையில் எனக்காக இந்த ஆரஞ்சு பழத் தோலை உறித்து தர முடியுமா? என உங்கள் துணையிடம் அன்பான வேண்டுகோளை முன்வைக்க வேண்டும்.
இந்த வேண்டுகோளுக்கு இணங்கி இவர் தோலை உறித்து கொடுத்தாராயின், அவர் உங்கள் மீது உண்மையான பாசமும் அக்கறையும் வைத்துள்ளார் என அர்த்தம். சில சமயம் அவர் அதனை மறுத்து விட்டால் உங்கள் உணர்வுகளை அவர் புரிந்துகொள்வதேயில்லை என அர்த்தமாம்.இது தான் ஆரஞ்சி பழத் தோல் தியரி.
இது சற்று வேடிக்கையாக விடயமாக இருந்தாலும் தங்களுக்காக சிறிய உதவிகளை கூட செய்கின்றாரா? இல்லையா? என பார்த்து துணையின் உளவியலை துள்ளியமாக கணிக்க முடியும்.
ஆனால் இதனை ஒரு விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர இதனை வைத்து துணைக்கு உங்கள் மீது அன்பு இல்லை என முடிவு எடுத்துவிட கூடாது. உங்கள் துணையின் அன்பை தெரிந்துகொள்ள இது சரியான வழிமுறை அல்ல.
ஒவ்வொருவருக்கும் இடையில் அப்பை வெளிப்படுத்தும் விதம் வேறுப்படும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் துணை நீங்கள் கேட்கும் போது ஆரஞ்சு பழத் தோலை உறிக்க முடியாது எனக் சொல்லியிருந்தால் அவரின் அப்போதைய மனநிலை குறித்தும் சற்று சிந்திக்க வேண்டும்.
அன்பை வெளிப்படுத்தும் பல்வேறு விடயங்கள் இருக்கின்றது. இந்த விடயத்தை வைத்து ஒருவரின் அன்பை அளந்துவிட முடியாது.