பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை சாக்ஷி அகர்வால் படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது இவர் Guest : Chapter 2, தீ நைட், புரவி, 120 Hours, குறுக்கு வழி ஆயிரம் ஜென்மங்கள் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் தனக்கு ஆர்ம்ப காலக்கட்டத்தில் கிடைத்த ஏமாற்றங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சாக்ஷி அகர்வால், “நான் பெங்களூரில் இருந்த சமயத்தில் ராஜா ராணி படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
அப்போது நான் மாடலிங் செய்து வந்தேன். என்னுடைய காஸ்டிங் ஏஜென்சியை தொடர்பு கொண்டு ராஜா ராணி படத்தில் நடிப்பது குறித்து பேசினார்கள்”. “அப்போது அவர்கள் என்னிடம் படத்தில் ஆர்யா தான் ஹீரோ, அட்லீ இயக்குனர். அந்த படத்தில் இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்று சொன்னார்கள்.
அந்த நேரத்தில் எனக்கு தயாரிப்பு பற்றி எல்லாம் பெரிய அளவில் தெரியாது. அப்போது அவர்கள் கூறுவது உண்மை என்று நம்பினேன்”. “அவர்கள் கூறியவாறு இரண்டு நாள் ஷூட்டிங்கிற்கும் சென்றேன் பின்னர் அவர்கள் என்னை தொடர்புக்கொள்ளவில்லை .
இறுதியில் எனக்கு தெரியாமலேயே படப்பிடிப்பு முடிந்து ரிலிஸ் ஆகிவிட்டது. ஆனால் நான் டேட்டுக்காக வெயிட் பண்ணிக் கொண்டே இருந்தேன்.
அப்போதே இது தொடர்பாக நான் இயக்குனரிடம் பேசி இருக்கனும் பேசாமல்விட்டது பெரிய தப்பு” என தனது வேதனைணை வெளிப்படுத்தியுள்ளார்.