ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள கடல் பிராந்திய வலய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
இந்து சமுத்திர பிராந்திய வலய நாடுகளில் பேண்தகு மற்றும் சமநிலையான அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகின்றது.
இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்யும் இலங்கை ஜனாதிபதிக்கு சிறந்த வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாகவும், நாளை இந்த மாநாடு ஆரம்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இராஜாங்க அமைச்சர்களான சுஜீவ சேனசிங்க, இராதகிருஸ்ணன், திலிப் வெதாரச்சி மற்றும் மத்திய மாகாண அமைச்சர் திலின பண்டார தென்னக்கோன் ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் இரண்டு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.