எதிர்காலத்தில் எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புத்திஜீவிகளின் குரல் என்ற அமைப்பின் கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போது அதில் பங்கேற்று இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
புத்திஜீவிகள் அரச நிர்வாக நடவடிக்கைகளில் பங்கேற்றாலும், அசரியல்வாதியாக வேண்டிய அவசியமில்லை.
நாட்டை சரியான வழியில் இட்டுச் செல்ல புத்திஜீவிகளை இணைத்துக் கொண்டு திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் எந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றாலும் பதவி எதனையும் ஏற்கப் போவதில்லை.
எனினும் மக்களுடன் இணைந்து சேவையாற்ற வேண்டிய அவசியமுண்டு. நாம் எப்போதும் மக்களுடன் இணைந்திருப்போம் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.