76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் பல பகுதிகளில் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் சுமார் 600 சிறைக் கைதிகள் இன்று (04.02.2024) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 22 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களை யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் S. இந்திரகுமார் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கைலாகு கொடுத்து வீடுகளுக்கு வழியனுப்பி வைத்தனர்.
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலும் கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 12 கைதிகள் இவ்வாறு சிறைச்சாலை அதிகாரிகளினால் கைலாகு கொடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 24 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் எஸ் பிரபாகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (04.02.2024) காலை 24 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் திருகோணமலை சிறைச்சாலையில் இருந்து ஆறு சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வு இன்று (04.02.2024) அத்தியட்சர் எச்.கே.டி.என்.பிரேமவங்கவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, திருகோணமலை சிறைச்சாலையின் பதில் பிரதான பொறுப்பதிகாரி சுகத் அமரசிங்க,புனர்வாழ்வு அதிகாரிகள்,மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.