Loading...
ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைனிய நகரமான லிசிசான்ஸ்க்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைன் – ரஷ்யா போரானது, முடிவில்லாமல் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது, இதில் இரு தரப்பிலும் இருந்து ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்து வைத்திருந்த லிசிசான்ஸ்க் நகரத்திலுள்ள வெதுப்பகம் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Loading...
தாக்குதலில், 28 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதோடு, 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, குறித்த தாக்குதலை உக்ரைன் தான் நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், உக்ரைன் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
Loading...