டோமினிக்கன் நாட்டைச் சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவர் பந்தயப் போட்டியில் அளவுக்கு அதிமாக மது அருந்தி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kelvin Rafael Mejía (23). இவர் தான் வழக்கமாக மது அருந்தும் கிளப்பிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற இவருக்கு ஒரு பந்தயப் போட்டி வைக்கப்பட்டுள்ளது. அதவாது ஒரு முழு மது பாட்டிலை அப்படியே குடிக்க வேண்டும் என்று போட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அவருடைய நண்பர்கள் உன்னால் முடியும் என்று உற்ச்சாகப்படுத்த அவரும் போட்டிக்கு ஒப்புக் கொண்டுள்ளார். இதில் அவருக்கு டெக்யூலா என்ற மதுவகையைச் சேர்ந்த முழு மது பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதை வாங்கிய அவர் சற்றும் தளராமல் அப்படியே குடித்து விட்டார். இதனால் பந்தயத்தில் கட்டப்பட்ட $630 அமெரிக்க டாலரும் அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அது குடித்து முடித்த சில நிமிடங்களிலே தடுமாறினார்.
இதனால் அவர் கழிவறைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மயக்க நிலையை அடைந்தது போல் இருந்ததால் சக நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவர் அளவுக்கு அதிமாக குடித்ததால், அது விஷமாக மாறி அவரது உயிரை பறித்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் விளையாட்டாக வைக்கப்பட்ட போட்டியில், Kelvin Rafael Mejía உயிர் போனது அவரது நண்பர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.