பெலியத்தையில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் நேற்று (04) ஹபராதுவயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டுதம்பே, ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பெலியத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்காலை, பெலியத்தை பிரதேசத்தில் ‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மாத்தறை, கம்புறுப்பிட்டி பிரதான வீதியில் கம்புறுப்பிட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில், துப்பாக்கிச்சூடு நடத்த வந்த ஜீப் வாகனத்தில் பயணித்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கிச்செல்லும் CCTV காட்சியை பொலிஸார் விசாரணைகளில் கண்டுபிடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.