தற்போதைய காலத்தில் அதிக உடல் எடையினால், மூட்டுவலி, முதுகுவலி இது போன்ற பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
அவ்வாறு ஏற்படும் பிரச்சனைகளை தடுத்து உடலின் எடையை பாராமரிப்பதற்கு, உடற்பயிற்சி மற்றும் இயற்கை உணவுகாள் முக்கிய பங்கினை வகிக்கிறது.
அந்த வகையில் நமது உடல் எடையினை அதிகரிக்க முதன்மை காரணமாக இருக்கும் உடல் ரீதியான பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளை பற்றியும் தெரிந்துக் கொள்ளலாம்.
ஜீரண பிரச்சனை
அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளால் வாய்வு, அஜீரணம், அல்லது உப்புசம் போன்ற விளைவுகள் தான் அதிகப்படியான உடல் எடைக்கு வழிவகுக்கிறது.
எனவே இதனை தடுக்க தினமும் எலுமிச்சை சாறில் இஞ்சியை தட்டி போட்டு, அதில் சிறிதளவு உப்பை கலந்து குடித்தால் ஜீரணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் குணமாகிவிடும்.
நோய் எதிர்ப்பு மண்டலம்
நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த சீரகம், சோம்பு, மிளகு மற்றும் மஞ்சள் ஆகியவை பெரிதும் உதவுகிறது. மேலும் இது நமது உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தை அதிகரிக்கச் செய்து, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
கூந்தல் வளர்ச்சி
கூந்தல் அழகு மட்டுமல்ல ஆரோக்கியம் தொடர்பான அனைத்து குறைபாடுகளையும் காட்டி கொடுக்கும். எனவே அதற்கு தினமும் கருவேப்பிலை மற்றும் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால், அதிக இரும்புச்சத்துக்கள் கிடைப்பதுடன், கூந்தல் உதிர்வு பிரச்சனைகளும் தடுக்கப்படும்.
இளமையான சருமம்
சருமத்தின் மென்மையை அதிகரித்து, என்றும் இளமையாக இருக்க சந்தனக் கட்டையை ரோஸ் வாட்டர் கொண்டு நனைத்து, அதை அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வந்தால், எப்போதும் சருமம் இளமையாக மினுமினுப்புடன் பொலிவாக இருக்கும்.
உடல் எடை
அதிகப்படியான உடல் எடையை குறைய முதலில் ஜீரண சக்தியை துரிதப்படுத்த வேண்டும். ஏனெனில் அவ்வாறு செய்யும் போது கொழுப்பு உணவுகள் வேகமாக கரையும்.
எனவே உடல் எடையை கட்டுக்குள் வைக்க, தினமும் காலையில் இளஞ்சூட்டில் தண்ணீர் குடிப்பது சிறந்த ஒரு வழியாகும்.