பெண்கள் எல்லோரும் அவர்களின் உதடு அழகாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். நமது உதடுகள் தான் நம்மை மிகவும் அழகாக எடுத்து காட்டும்.
அதனால் தான் அனைவரும் கருமையான உதட்டை விரும்புவதில்லை. உதடுகள் கருமையாக இருந்தால் அது எமது முக அழகையே பாதிக்கும்.
அந்த கருமை நிறம் சிலருக்கு பழங்கள் மூலமாகவும் வரும். சிலருக்கு உணவுகள் மூலமாகவும் வரும். ஆனால் இந்த கருமை நிறத்தை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு மாற்ற முடியும் அதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. எலுமிச்சை சாறை கொஞ்சம் எடுத்து அதை உங்கள் உதட்டில் தடவி 15 நிமிடங்களுக்கு பின்பு கழுவவும் அவ்வாறு செய்தால் உதட்டின் கருமை மாறும்.
2. சிறிது சர்க்கரையை ஆலிவ் எண்ணெய் அல்லது தேனுடன் கலந்து ஸ்க்ரப் செய்து உதட்டில் பூசினால் கருமையை ஏற்படுத்த கூடிய செல்களை அகற்றும்.
3. படுக்கைக்குச் செல்வதற்கு முன் சிறிது பீட்ரூட் சாற்றை உதடுகளில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலையில் உங்கள் உதட்டை கழுவுங்கள். அதை தினமும் செய்ய வேண்டும்.
4. ஒரு வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி, உதடுகளில் சில நிமிடங்கள் தேய்க்கவும். பின்னர் 10 நிமிடங்கள் விட்டு கழுவ வேண்டும்.
5. பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இதை படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் உதடுகளில் தடவி அப்படியே விட்டு கழுவினால் உதடு சிறந்த நிறத்தில் வரும்.