அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற(2022.07.09) அரகலிய போராட்டத்தின் போது தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று(5) கைது செய்தனர்.
பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளில் குறித்த நபர், வீடுகளுக்கு சென்று ஆங்கில மொழி பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம்(6) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.