வெறிநாய் மனிதர்களை கடித்து விட்டால், அந்த நாயிற்கு ஏற்படும் ராபிஸ் என்ற நோய், மனிதர்களுக்கு ஹைட்ரோ போபியா எனும் நோயாக தொற்றுகிறது.
ஆனால் ஒரு மனிதனுக்கு ராபிஸ் நோய் தாக்கினால் மரணம் நிச்சயம். எனவே இதற்கு தடுப்பூசி போட்டுக்கொண்டால் மரணத்தை முற்றிலும் தடுக்கலாம்.
வெறிநாய் தடுப்பூசி
முதலில் நமது வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு அவசியமாக ஏ.ஆர்.வி. எனும் தடுப்பூசியை கட்டாயமாக போட்டு விட வேண்டும்.
இந்த ஊசியை 3 மாதக் குட்டியாக இருக்கும் போது, முதல் ஊசியும், 6 மாதமாக இருக்கும் போது, இரண்டாவது ஊசியும், தொடர்ந்து ஆண்டுதோறும் ஏ.ஆர்.வி. போட்டு வர வேண்டும்.
வெறிநாய் கடிக்கு முதலுதவி என்ன?
வெறிநாய் கடித்த இடத்தில் ஏற்பட்ட காயத்தை தண்ணீர் மற்றும் சோப்பை பயனபடுத்தி கழுவ வேண்டும்.
பின் அந்த இடத்தில் ஏதாவது ஒரு கிருமி நாசினி அல்லது ஸ்பிரிட்டை பயன்படுத்தி தடவ வேண்டும்.
மருந்து போட்ட பின் வெறிநாய் கடித்த இடத்தின் காயத்துக்குக் கட்டு போடக் கூடாது.
வெறிநாய் கடித்து விட்டால் ஏற்படும் அறிகுறி
வெறி நாய் கடியினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தண்ணீரைக் கண்டால் வலிப்பு, உடல் நடுக்கம் ஏற்படும். லேசான காற்று, ஒலி கூட அவர்களுக்கு கடுமையான வலியை ஏற்படுத்தும்.
வெறிநாய் கடியின் சிகிச்சை
வெறி நாய் கடித்தால் தற்போது தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போட வேண்டும் என்பது அவசியமில்லை.
அதற்கு பதிலாக Vero Rab என்னும் மருந்தை ஆறு முறை ஊசி மூலம் சதைப் பகுதியில் செலுத்த வேண்டும்.
அந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட நேரத்தில் உணவுப் பத்தியம் எதுவும் கிடையாது. வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் கூட இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளலாம்.
மனிதரை கடித்த வெறிநாயைக் கொல்வது சரியா?
கடித்த வெறி நாயை உடனே அடித்துக் கொல்லும் பழக்கம் சில இடங்களில் உண்டு. ஆனால் இது முற்றிலும் தவறு.
கால்நடை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்வது நல்லது. இறந்த நாயின் மூளையில் Nigri Bodies உள்ளதா என்று பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.