2022.10.07ம் திகதி பிரபல நடிகரும் மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனைச் சென்று சந்தித்திருந்தார் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.
ஈழத் தமிழருக்கு ஆதரவைத் திரட்டும் நோக்கத்தோடு சிறீதரனால் மேற்கொள்ளப்பட்ட மிகவும் வரவேற்கத்தக்க ஒரு முயற்சி அது.
ஆனால் அந்த முயற்சி பின்னர் சர்ச்சையாக மாறியிருந்ததுதான் சோகம்.
சிலருக்கு நாக்கில் சனி என்று கூறுவார்கள்.
இலங்கைக்குத் திரும்பி வந்ததும் வராததுமாக, இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வி வழங்கிய சிறீதரன், கமலஹாசனின் அழைப்பின் பெயரிலேயே தாம் அவரைச் சந்தித்ததாகக் கூறித் தொலைத்துவிட்டாராம்.
ஈகோவுக்கு பெயர்போன கமலஹாசனுக்கு இதனால் மிகுந்த கோபமாம்.
சிறிதரன் கேட்டுக்கொண்டதன் பெயரிலேயே சிறிதரனைச் சந்திப்பதற்கு கமலஹாசன் உடன்பட்ட நிலையில், கமலஹாசனின் அழைப்பின் பெயரில் அவரை சந்தித்ததாக சிறீதரன் கூறியிருந்த கருத்துப் பற்றி கவலை வெளியிட்டிருந்தார் கமலஹாசனுடனான சந்திப்பை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்.
இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபடுவது நல்லதுதான்.. ஆனால் அதில் நாணயமாக, நிதானமாக நடந்துகொள்வது மிக மிக அவசியம்.
சிறீதரன் தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு பயணிப்பார் என்று நம்புகின்றோம்.