நாடளாவிய ரீதியில் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பமாகி இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 56,541 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 49,558 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் குற்றப்பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 6,983 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.
இந்த சுற்றிவளைப்புகளின் போது 142 கிலோ 541 கிராம் ஹெரோயின், 208 கிலோ 290 கிராம் ஐஸ், 974 கிலோ 605 கிராம் கொக்கெய்ன் ஆகிய போதைப்பொருட்கள் பாதுகாப்பு தரப்பினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் 1817 பேர் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 1,981 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.