நாட்டில் இன்று(7) எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்புள்ளதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நேற்று(6) காலை 10 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
இதன் காரணமாகவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களால் இன்றைய தினத்திற்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கும் காலை பத்து மணிக்கு முன் எரிபொருளை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு தமது சங்கமும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் பொறுப்பல்ல எனவும் விநியோகஸ்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் விற்பனை துரித கதியில் வீழ்ச்சியடைந்து வருவதால், விநியோகஸ்தர்கள் காலை 10 மணிக்கு முன்னதாக எரிபொருளை வைப்பு செய்வது சிரமமாக உள்ளதால் விநியோகஸ்தர்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் காசோலை வசதியை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.