தென்னிந்திய நடிகரான விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த 10 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின், இன்று காலை சென்னை திரும்பினார்.
அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில், விஜய் அரசியல் கட்சித் தொடங்கியது குறித்த கேள்வி முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் வரவேற்போம், மகிழ்ச்சி.” எனத் தெரிவித்துள்ளார்.