நமது உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் விட்டமின் –பி2 மிக அவசியம், அதன் குறைப்பாட்டினால் உடலில் பல்வேறு குறைப்பாடுகள் ஏற்படுகின்றன.
நமது உடலில் உள்ள 8 வகையான விட்டமின்களில், விட்டமின் பி2 எனும் ரிபோஃபிளேவின் நீரில் கரையும் தன்மையுடையது.
இதனால் நமது தினசரி உணவில் விட்டமின் –பி2 உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
அறிகுறிகள்
உடல் விட்டமின் பி2 குறையும் போது அறிகுறிகள் ஏற்படுகின்றன.அவற்றில் சில..
- உடல் சோர்வு
- மனநிலையில் மாற்றம்
- தொண்டை வலி
- தோல் வெடிப்பு
- ஒவ்வாமை
- இரத்த சோகை
விட்டமின் பி2 அதிகம் காணப்படும் உணவுகள்
உடலில் விட்டமின் பி2 வின் அளவை அதிகரிக்க நமது உணவு முறையினை முழுவதும் மாற்ற வேண்டியது இல்லை. அதில் ஒரு சில மாற்றங்களை செய்தாலே போதுமானதாகும்.
சிசுவின் வளர்ச்சியிக்காக கர்ப்பிணிகளுக்கு விட்டமின் பி2 மிக முக்கியமானது.
மேலும் பால் உணவுப் பொருள்கள்,பச்சைக் காய்கறிகள், முட்டை, கோதுமை, பருப்பு வகை போன்றவற்றில் அதிகமாக உள்ளது.
உணவில் விட்டமின் பி2வின் பயன்கள்
ரத்தசோகையினை தடுத்து, சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. உடல் சருமத்தை ஆரோக்கியமாக வைத்து, ஒவ்வாமையினைத் தடுக்கிறது.
வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, ரத்த சிவப்பணுக்களில் ஆக்சிஜனேற்றத்திற்கு உதவுகிறது.