இரவில் தூக்கத்தை கெடுக்கும் சில பழங்களை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பழங்கள் உடம்பிற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் என்றாலும், நேரம் தவறி சாப்பிட்டால் அது உடம்பில் சில பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
அந்த வகையில் இரவில் சில பழங்களை சாப்பிட்டால் தூக்கத்தில் பிரச்சினை ஏற்படுமாம். அதிலும் இரவு உணவிற்கு பின்பு பழங்களை சாப்பிடுவதால், வயிற்றுக்குள் ஆசிட் ரீஃப்ளக்ஸ் லெவல் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.
இரவில் வாழைப்பழத்தினை உட்கொண்டால் மெட்டபாலிச சக்தி பாதிக்குமாம். இவை உடல் சூட்டை அதிகரித்து இரவு தூக்கத்திற்கு பிரச்சினையை கொடுக்குமாம்.
வெயில் காலத்தில் உடல் சூட்டையும், தாகத்தையும் தணிக்கும் தர்பூசணி நீர்ச்சத்து நிறைந்த பழமாகும். இதனை இரவில் சாப்பிட்டால் அடிக்க சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும், மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும்.
நாள் முழுவதும் ஹெல்தியாக இருப்பதற்கு சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். இவை தாகத்தை குறைக்கும்.
ஆனால் உடம்பில் அசிடிட்டி ஏற்பட்டு நெஞ்செரிச்சலை உருவாக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கொய்யா பழத்தினை சாப்பிட்டால் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால் இவற்றினை இரவில் சாப்பிடக்கூடாது.
அப்படியே சாப்பிட்டால் செரிமான பிரச்சினை ஏற்படுவதுடன், வயிறு வலி உள்ளிட்ட பல அசௌகரியங்கள் ஏற்பட்டு தூக்கம் தடைபடுகின்றது.