பொதுவாக மனிதர்களாக பிறந்த நாம் நம்முடைய வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை தூக்கத்திற்காக செலவிடுகிறோம்.
இதன்படி, ஆரோக்கியமாக வாழும் ஒரு நபர் நாளொன்றுக்கு ஏழு துவக்கம் எட்டு மணிநேரம் நிம்மதியாக தூங்க வேண்டும்.
இந்த முறையை கடைபிடிக்காத பட்சத்தில் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங் கொடுக்க வேண்டியிருக்கும்.
இப்படியொரு நிலையில் தூக்கத்திற்கு ஏற்ற சூழல் இருந்தால் தான் நிம்மதியான ஒரு உறக்கத்தை பெற்றுக் கொள்ளலாம்.
அந்த வகையில் நிம்மதியாக தூக்கத்தை தரும் மெத்தையை வாங்கும் பொழுது ஒரு சில விடயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.
அப்படி என்னென்ன விடயங்களில் அதிகமாக கவனம் செலுத்துவது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. புதிதாக மெத்தை வாங்குபவர்கள் அதன் அமைப்பு எவ்வாறு இருக்கின்றது என்பதனை கவனிக்க வேண்டும். தூங்கும் பொழுது நம்முடைய உடல் முழுவதும் மெத்தை தாங்குகின்றது. இதனால் டிஜிட்டல் முறையில் துல்லியமான போம் வெட்டுக்கள் மற்றும் மெத்தையின் விளிம்பு அடுக்குகள் இருப்பது கட்டாயம்.
2. மெத்தையின் துணி வெப்பநிலையைக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பது அவசியம். இரவில் நல்ல தூக்கம் வரவேண்டும் என நினைப்பவர்கள் வெப்பத்தை வெளியிடும் வகையில் மெத்தை உள்ளதா? என்பதனை பரிசீலிக்க வேண்டும்.
3. மெத்தை வாங்கும் பொழுது ஒருவரை எளிதாக தூங்க வைக்குமா? என்பதனை பார்த்து வாங்க வேண்டும்.
4. பணத்திற்காக யோசித்து தரமற்ற பிராண்டுகளை செய்வதை தவிர்த்து பணம் அதிகமானாலும் பரவாயில்லை என ஒரே தடவையில் தரமான மெத்தையை வாங்க வேண்டும்.
5. நாம் வாங்கும் மெத்தை தரமான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதனை கவனிக்க வேண்டும். ஓபன்-செல் மெமரி போம் இயக்கத்தை உறிஞ்சுவது மட்டுமல்லாமல், சுவாசம் மற்றும் கட்டமைப்பையும் தருகின்றது.