இன்று பெரும்பாலான நபர்கள் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுகின்றனர். இதனால் என்ன பிரச்சினை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அதிக காரம் சாப்பிட்டால் வயிறு எரிச்சல், அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், வயிற்று வலி, வாயு, குமட்டல், வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
அதிக காரம் வயிற்று புண்கள், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
நாக்கு மற்றும் தொண்டை எரிச்சல், வாய்ப்புண், தொண்டை கரகரப்பு, இருமல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
அதிக காரம் சாப்பிடுவது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
குறிப்பாக மூக்கில் எரிச்சல், தும்மல், மூக்கடைப்பு போன்றவை ஏற்படலாம்.
தூக்கமின்மை, பதட்டம், தலைவலி போன்றவற்றிற்கு வழிவகுப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கின்றது.
கர்ப்பிணிப் பெண்கள் அதிக காரம் சாப்பிடுவது கர்ப்பகால நீரிழிவு மற்றும் முன்கூட்டிய பிரசவத்திற்கு வழிவகுக்கும்.