கொரோனா தொற்றின் காரணமாக உலக மக்கள் தங்களை தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள பல உத்திகளை கையாண்டனர்.
இதனால் பயத்தில் மக்கள் முகக் கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
அந்த பழக்கத்தின் மூலம் தான் மக்கள் எல்லேரும் சானிடைசா்கள் பயன்படுத்தும் பழக்கத்திற்கு உள்வாங்கப்பட்டனர்.
தற்போது தெரியவந்த தகவலின்படி நாம் கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் சானிடைசா்களால் நமது குழந்தைகளின் கண்களுக்கு பாதிப்பு உண்டாகின்றது என தெரியவந்துள்ளது.
இந்த சானிடைசர்களை நாம் தற்பாதுகாப்பிற்காக எடுத்துகொண்டாலும் அது நமது குழந்தைகளின் கண்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன என்பதை சமீபத்தில் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தீங்கிழைக்கக்கூடிய வேதிப் பொருட்கள் மூலம் அதிக அளவிலான கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக பிரான்ஸ் விஷ கட்டுப்பாட்டு மையம் கொடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் 2019ம் ஆண்டு ஒரு தவழும் குழந்தைக்கு இந்த கண்பாதிப்பு ஏற்பட்டுள்ளது, ஆனால் 2020 ம் ஆண்டு 16 குழந்தைகளுக்கு இந்த கண் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
தொற்றுக்களில் இருந்து சானிடைசர்கள் நம்மை பாதுகாத்தலும் இது குழந்தைகளின் கண்களுக்கு ஆபத்தானது. இது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயமாகும்.
எனவே குழந்தைகள் சானிடைசர் பயப்படுத்தும் போது அவர்களை உங்கள் கண்காணிப்பில் கையாள விடுங்கள்.
பொது இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் சானிடைசர்களை உங்கள் கண்காணிப்பில் பயன்படுத்த அனுமதிப்பது நல்லது.