பொதுவாகவே சிறுவர்களானாலும் சரி பெரியவர்கள் ஆனாலும் சரி ஆரோக்கியம் என்பது அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் தான் தங்கியிருக்கின்றது.
குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தின் மீதும், உணவுகளை எடுத்துக் கொள்வதிலும் போதிய விழிப்புணர்வு, அக்கறை இருக்காது. பெற்றோர்கள் அவர்களின் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே, குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர குழந்தைகளுக்கு தினசரி காலையில் வெறும் வயிற்றில் என்ன உணவு கொடுக்கிறீர்கள் என்பதும் மிக முக்கிய இடம் வகிக்கின்றுது.
அந்த வகையில் குழந்தைகளின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்திற்கு வெறும் வயிற்றில் என்னென்ன உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகள் ஆரோக்கியத்தை பாதுகாக்க சிறந்த ஊட்டச்சத்துக்கள் அவசியம். பாதாமில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்புகள் நிறைந்து காணப்படுகின்றது.
தினசரி குழந்தைகளுக்கு வெறும் வயிற்றில் பாதாம் கொடுப்பது அவர்களின் உடல் உள ஆரோக்கியத்தை பலப்படுத்தும்.
தினமும் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு வாழைப்பழம் சாப்பிட கொடுத்தால் செறிமான பிரச்சினைகள் இன்றி குழந்தைகளுக்கு நன்றாக பசி ஏற்படும்.
குறிப்பாக சற்று பலவீனமான குழந்தைகளுக்கு இது மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கு குழந்தைகளை பொருத்த வரை வாழைப்பழம் சிறந்த தீர்வாக இருக்கும்.
குழந்தைகளுக்கு தினமும் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட கொடுத்தால் குழந்தைகளின் பார்வைத்திறன் அதிகரிக்கும்.
ஆப்பிளில் கால்சியம், இரும்பு, துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இது குழந்தைகளின் ஆராக்கியத்தை மேம்படுத்துவதில் பெரிதும் துணைப்புரிகின்றது.