Loading...
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11.2.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
Loading...
பொலிஸ் நிலையத்தின் அறையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை வேளை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழப்புக்கான காரணம் தனிப்பட்ட காரணங்களா, பணிச் சுமையா என்பது தெரியவரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Loading...