ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்பது பழமொழி, இதிலிருந்து அதன் மருத்துவ குணங்களை நீங்கள் அறிந்திருக்க இயலும்.
சாதாரணமாக தரிசு நிலங்களிலும், வயல் வெளிகளிலும் வளரக்கூடியது ஆவாரை.
இதன் காய், பூ, பட்டை, இலை, வேர் என அனைத்தையும் இணைத்து ஆவாரை பஞ்சாங்கம் என்றழைக்கின்றனர்.
* இதனை தினமும் ஒரு மேசைக்கரண்டி எடுத்து வாயில் போட்டு வெந்நீர் பருகி வர சர்க்கரை நோய், சோர்வு, தூக்கம் சரியாகும்.
* ஆவாரம் பூவின் இலைக்கொழுந்தை வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள், இதனை நீர் ஊற்றி கசாயமாக காய்ச்சிய பின்னர் பால் சேர்த்து பருகிவர சர்க்கரை நோய் சரியாகும், பூவை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வருவதும் நல்லது.
* ஆவாரம் பட்டையை நீரில் கொதிக்கவைத்து ஆறியதும், அந்நீரை கொண்டு வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
* ஆவாரம் பூவை சாப்பிட்டு வந்தால் உடல் துர்நாற்றம் நீங்கும், இதனுடன் பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தாலும் பலன் உண்டு.
* உடல் சூட்டினால் அவதிப்படும் நபர்களுக்கு ஆவாரம் பூ பயனளிக்கும், இதன் கஷாயத்தை தொடர்ந்து குடித்துவர சூடு தணியும், சூட்டினால் கண்களில் கட்டி வந்து அவதிப்படும் நபர்களும் பூவின் பொடியில் நீர் விட்டு குழப்பு கட்டியின் மீது தடவ சரியாகும்.
* ஆவாரை பிசின் 4-10 கிராம் எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வர வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
* ஆவாரை வேர்ப்பட்டை குடிநீருடன் பசும்பால், எளிநொய் கலந்து தைலம் செய்து, குளிக்கும் முன் தலையில் தேய்த்து குளித்தால் உடல் சூடு தணியும்.