பிலவுக் குடியிருப்பு மக்களின் போராட்டம் நிறைவுக்கு வந்ததையடுத்து தமது சொந்த நிலத்தை மீட்பதற்காக கேப்பாப்புலவு மக்கள் இன்று ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தின்போது இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களிலிருந்து அழைத்துவரப்பட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். சொந்த நிலத்தை விடுவிப்பதற்காக போராட்டம் பயனளிக்காது கடந்த ஒரு மாத காலமாக பிலவுக்குடியிருப்பு மக்கள் கேப்பாப்புலவு இராணுவமுகாமுக்கு முன்னால் தற்காலிக கொட்டகை அமைத்து போராடி தமது நிலத்தை மீட்டெடுத்துள்ளனர்.
இதனையடுத்து, கடந்த 1ஆம் நாளிலிருந்து இன்று ஆறாவது நாளாக கேப்பாப்புலவைச் சேர்ந்த 128 குடும்பங்களுக்கு சொந்தமான 484 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேப்பாபுலவு மக்களையும் இராணுவத்தினர் அச்சுறுத்தும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.