நிறைவேற்று அதிபர் பதவியை இல்லாதொழிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிபர் பதவியை இல்லாதொழிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைகளை உயர்த்தி சம்மதம் தெரிவிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் பதவியை நீக்குவதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறும், அதன் பின்னர் பிரேரணையை சர்வஜன வாக்கெடுப்புக்கு சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன.