இலங்கை வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுலாப் பயணிகள் டிஜிட்டல் முறையில் UPI மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி ஒன்லைன் மூலம் பணம் செலுத்த முடியும்.
புதிய பரிவர்த்தனை திட்டத்தில் 10,000 வணிக நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் தடையற்ற கொடுப்பனவு வசதிகளுக்காக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கையை 65,000 வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
UPI என்பது உடனடி நிகழ்நேர கட்டண முறையாகும். இது, வங்கிகளுக்கு இடையில் மற்றும் தனியாட்களுக்கு வணிகப் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.
அண்மைக்காலமாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் மட்டும் சுமார் 130000 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களில் இந்திய சுற்றுலா பயணிகள் முன்னிலை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.