ஐக்கிய அரபு அமிரகத்தில் முதல் இந்து கோயில் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கோயிலுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துச செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவில் கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளதோடு திறப்பு விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்வுள்ளார்.
மேலும், பொதுமக்கள் எதிர்வரும் மாதம் (மார்ச்)முதலாம் திகதி முதல் கோயிலை பார்வையிடலாம் என அபுதாபி பிஏபிஎஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இதற்காக அந்த அமைப்பின் இணையதளம் மற்றும் பெஸ்டிவல் ஆப் ஹார்மனி என்ற செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துபாய் – அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் 55 ஆயிரம் சதுர அடி இடத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.