சமூக நீதியை தலைகீழாக மாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் இணையுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இயலாமையை எதிர்க்கட்சிகள் மீது சுமத்தும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,அரசாங்கத்தின் வரையறையற்ற வரி விதிப்புக்களினால் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.
பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்கும் அரசாங்கம் பொதுமக்கள் மீது வரிச் சுமையை திணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் அரசாங்கத்தினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளில் எவ்வித சட்டபூர்வ தன்மையும் கிடையாது என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.